NATIONAL

மக்களுக்கு நன்மையளிக்கும் பொருளாதார திட்டங்கள் தொடர வேண்டும்

9 மார்ச் 2019, 2:10 AM
மக்களுக்கு நன்மையளிக்கும்  பொருளாதார திட்டங்கள் தொடர வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 9-

மக்களின் ஏழ்மையைப் போக்க, இன, சமய பேதமின்றி பொருளாதாரத்தை ஈட்டும் திட்டங்களை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, அரசியலில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் இன அடிப்படையிலான அறிக்கைகளையும் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் எதிர்கொள்வதற்கு உதவும் என்று கெஅடிலான் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு கொள்கையையும், தலைமைத்துவத்தையும் கடுமையாக எதிர்க்க வேண்டியதும் அவசியமாகும் என்றார் அவர்.

எனவே, மக்களின் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் பொருளாதாரத் திட்டங்களை பக்காத்தான் அரசு மேற்கொள்ள வேண்டும். தலைவர்களும் அதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.