NATIONAL

முஹீடின்: வெகு விரைவில் தோல் கட்டணம் தொடர்பில் நல்ல செய்தி !!!

22 பிப்ரவரி 2019, 3:01 AM
முஹீடின்: வெகு விரைவில் தோல் கட்டணம் தொடர்பில் நல்ல செய்தி !!!

செமிஞ்சே, பிப்ரவரி 22:

நெடுஞ்சாலை தோல் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசாங்கம் விரைவில்  வெளியிடும் என்று உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முஹீடின் யாசின் தெரிவித்தார். நேற்று பெரானாங் பத்து 16 கிராமத்தில் நடைபெற்ற செமிஞ்சே சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தமது உரையில் அவர் இவ்வாறு கூறினார். அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

" சமீபத்தில் தோல் கட்டணம் தொடர்பில் அமைச்சரவையில் பேசினோம். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதைப் பற்றி நான் மேலே எதுவும் கூற முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்," என அவர் உறுதி மொழி அளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.