NATIONAL

கோபிந்த்: சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க புதிய சட்டத்தை அரசு ஆய்வு செய்யும்

22 பிப்ரவரி 2019, 2:01 AM
கோபிந்த்: சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க புதிய சட்டத்தை அரசு ஆய்வு செய்யும்

கோலா லம்பூர், பிப்ரவரி 22:

சமூக வலைத்தளங்களில் வெறுப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நபர்களை தடுக்க ஏதுவாக புதிய சட்ட மசோதா அல்லது நாடாளுமன்ற செயற்குழு உருவாக்க அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

அண்மையில் பரவலாக அவதூறு செய்திகள் வெளியாகி உள்ளதை கருத்தில் கொண்டு இந்த சட்ட மசோதா கண்டிப்பாக தேவையான ஒன்று என அவர் தெரிவித்தார். நேற்று அமைச்சர் மற்றும் தகவல் ஊடகங்கள் இடையே நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். மனித உரிமை ஆணையம் அல்லது சுவாக்காம் சேராத்தோன் இம்பீரியல் தங்கும் விடுதியில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.