NATIONAL

மாநில கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு வெ 67.58 மில்லியன் ஒதுக்கீடு!

11 பிப்ரவரி 2019, 6:47 AM
மாநில கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கு  மத்திய அரசு வெ 67.58 மில்லியன் ஒதுக்கீடு!

ஷா ஆலம், பிப்.11:

சிலாங்கூர் கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு 67.58 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தகவலை தமது டூவீட்டரில் தெரிவித்துள்ள கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், உலு சிலாங்கூர் தாமான் பெலாங்கியில் நிர்மாணிக்கப்படும் புதிய தேசிய இடைநிலைப் பள்ளிக்கும் 20.7 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஒதுக்கீடு மிகவும் மனநிறைவளிப்பதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தமது டூவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டார் பாங்கியில் உள்ள வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி வகுப்புகளை மறுசீரமைக்கும் பணிகளுக்காக வெள்ளி 180,000 ஒதுக்கீடு செய்துள்ளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.