NATIONAL

வெ. 5 லட்சம் பெறுமானமுள்ள போலி பொருட்கள் பறிமுதல்

28 ஜனவரி 2019, 7:45 AM
வெ. 5 லட்சம் பெறுமானமுள்ள போலி பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், ஜன.28:

உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு மேற்கொண்ட அதிரடி சோதனையில் பல்வேறு முத்திரைகள் கொண்ட 5,295 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைநகரில் போலி பொருள் விற்பனைக்கு எதிராக புடு, ஜாலான் குளுகோரில் உள்ள ஒரு பேரங்காடியின் 3 கிடங்குகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கோலாலம்பூர் உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க பிரிவு தலைமை அதிகாரி லோ சுவீ ஹோன் தெரிவித்தார்.

“ கடந்த ஒரு மாதமாக அமைச்சு மேற்கொண்ட உளவு நடவடிக்கை மற்றும் வர்த்தக முத்திரை பதிவு உரிமையாளரின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் பலனாக இந்தப் பொருட்களை நாங்கள் கைப்பற்றினோம் “ என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.