NATIONAL

செமினி சட்டமன்ற இடைதேர்தல்: பாக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் முடிவெடுக்கும்

16 ஜனவரி 2019, 2:41 AM
செமினி சட்டமன்ற இடைதேர்தல்: பாக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் முடிவெடுக்கும்

 

ஷா ஆலம், ஜன.16-

செமினி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு பாக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பார்ட்டி பெர்சத்து மலேசியா கட்சியின் வேட்பாளரை அல்லது இதர உறுப்புக் கட்சி வேட்பாளரை களம் இறக்குவதா என்பதை அந்த மன்றம் தீர்மானிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு சம்பந்தப்பட்ட மன்றத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

2018ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அம்மன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் மாநில அரசு ஆதரிக்கும் என்றார் அவர்.

காஜாங் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.