NATIONAL

இடைக்கால மன்னராக பேரா சுல்தான் !

7 ஜனவரி 2019, 7:24 AM
இடைக்கால மன்னராக பேரா சுல்தான் !

கோலா லம்பூர், ஜனவரி 7:

இன்று கூடிய மலாய் ஆட்சியாளர் மன்றம், பேரா சுல்தான் நஸ்ரின் முயுஸ்ஸுடின் ஷாபினியை  இடைக்கால மாமன்னராக தேர்வு செய்தது.

சுல்தான் நஸ்ரினுக்கு அணுக்கமான வட்டாரம் இதனைத் தெரிவித்ததாக அஸ்ட்ரோ அவானி கூறியது.

இஸ்தானா நெகாராவில் இன்று, ஒன்பது சுல்தான்களில் அறுவர் கூடிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது.

இதனிடையே, மாமன்னரைத் தேர்வு செய்யும் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என்றும் அது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் முடிவுக்கு கட்டுப்படும் என்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

நாட்டின் 15ஆவது மாமன்னரான சுல்தான் முகமது V எடுத்த முடிவை தாம் மதிப்பதாக அவர் சொன்னார்.

இது அரச விவகாரம். அவர்களே முடிவு செய்வர் என்றார் அவர்.

இதை மக்களும் முடிவு செய்ய இயலாது. ஆயினும், இம்மன்றம் புதிய மாமன்னரை விரைவில் அறிவிப்பு வரும் என அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.