NATIONAL

இளைஞர் & விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக டாக்டர் வத்சலா !!!

7 ஜனவரி 2019, 6:52 AM
இளைஞர் & விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக டாக்டர் வத்சலா !!!

கோலாலம்பூர், ஜனவரி 6:

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் துணைத் தலைமைச் செயலாளர், டாக்டர் வத்சலா ஆர்.ஆர்.வி சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் பக்கார் அறிவித்தார்.

7 அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்கள் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

“தேசிய சீர்திருத்த முயற்சிகளுக்கு பொதுச் சேவையானது முதுகெலும்பாக அமைகிறது. ஆகவே, இந்த மாற்றங்கள் அமைச்சுகளின் உயர் மட்ட நிருவாகத்தை மேலும் பலப்படுத்துவதுடன், கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதுணையாக இருக்கும்” என வெள்ளியன்று (ஜனவரி 4) அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் முந்தையச் தலைமைச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹாகிம் அலி அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.