NATIONAL

கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் தங்களை பதிந்திருக்க வேண்டும்

27 டிசம்பர் 2018, 6:12 PM
கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் தங்களை பதிந்திருக்க வேண்டும்

கோலாலம்பூர்: கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் (Dewan Bandaraya Kuala Lumpur) தங்களை பதிந்திருக்க வேண்டும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட் சாலே கூறினார். மேலும், கோயில்களின் பொறுப்பாளர்கள் குறித்த விபரங்களும் பதிவுச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தற்போதைய காலக்கட்டத்தில், கோயில்களின் நிலை என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. கோயில்கள் இருக்கும் இடத்தைப் பற்றியும் தகவல்கள் இல்லை. கோயில்கள் நிறையக் கட்டப்பட்டுள்ளன, ஆனால், அக்கோயில்களின் இருப்பு இதுவரையிலும் எங்களுக்கு தெரியாது”, என ஷாருடின் கூறினார்.

அவ்வாறு பதிவுச் செய்யப்படாத கோயில்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கானபதிவுக் காலக்கெடு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.