NATIONAL

அஸ்வான்டின் கைது செய்யப்பட்டார்?

26 டிசம்பர் 2018, 12:28 PM
அஸ்வான்டின் கைது செய்யப்பட்டார்?

கோலா லம்பூர், டிசம்பர் 26:

மலேசிய மலாய்காரர் கூட்டமைப்பின்  (ஜேஎம்எம்)  தலைவர் அஸ்வாண்டின் ஹன்சாவைப் போலீசார் கைது செய்துவிட்டதாகக் இன்று அறிவிப்பு செய்தது.

அதன் மின்னஞ்சல் ஒன்று அஸ்வாண்டின் இன்று பிற்பகல் 2.45க்கு டத்தோ கிராமாட்டில் கைது செய்யப்பட்டு கிள்ளான் உத்தாரா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறிற்று.

முன்னதாக, சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹ்மட் கிறிமினல் மிரட்டல் விவகாரங்கள் தொடர்பான குற்றவியல் சட்டம் 506-ஆவது பிரிவின்கீழ் அஸ்வாண்டின்மீது விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.

நேற்றைய பேரணியில் உரையாற்றிய அஸ்வாண்டின் சீபீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் கலகம் செய்தவர்களைக் கைது செய்யாவிட்டால் ஒரு காவல் நிலையத்தைத் தாக்கப் போவதாக மிரட்டினாராம்.

அஸ்வாண்டின் கைதானதை போலீசாரும் உறுதிப்படுத்தினர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.