NATIONAL

சபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்

12 டிசம்பர் 2018, 8:32 AM
சபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்

கோத்தா கினபாலு, டிசம்பர் 12:

சபா அம்னோவை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கொண்டனர். அம்னோ எம்பிக்களில் ரோலண்ட் கியாண்டி (பெலுரான்), அப்துல் ரஹீம் பக்ரி (கூடாட்), அஸிஸா முகமட் டூன் (புபோட்) மற்றும் ஸாக்காரியா முகமட் இட்ரிஸ் ஆகியோர் அடங்குவர். சிப்பித்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் யாமானி ஹாபீஸ் மூசா கட்சியை விட்டு விலகி விட்டதாகவும் ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இன்னும் மூசா அமான் மற்றும் கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் பூங் மொக்தார் ராடின் மட்டுமே அம்னோவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, மூசா அமானின் சிபூகா சட்ட மன்ற தொகுதியை தவிர 16 அம்னோ சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியை துறந்தனர். மேலும், பிபிஆர்எஸ் கட்சியை சேர்ந்த பென்சியாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்தூர் ஜோசப் கூரூப் தேசிய முன்னணியை விட்டு விலகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தகவல்: மலேசியா கினி

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.