NATIONAL

துன் மகாதீர்: 15-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் கூட்டணியை நான் வழி நடத்த மாட்டேன்

10 டிசம்பர் 2018, 3:22 AM
துன் மகாதீர்: 15-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் கூட்டணியை நான் வழி நடத்த மாட்டேன்

புத்ரா ஜெயா, டிசம்பர் 9:

துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமை ஏற்கவில்லை என்றாலும் 15-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜேயா நிர்வாகத்தை நிலைநிறுத்த முடியும் என்று பிரதமர் கூறினார். ஆனாலும், மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்றால்,  ஊழலற்ற நிர்வாகமாக அமைந்திருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என்று புத்ரா ஜெயா பல்நோக்கு மண்டபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.

" 15-வது பொதுத் தேர்தலில் நான் தலைமை பொறுப்பில் இல்லை என்றாலும், நாம் நேர்மையான முறையில் அரசாங்கத்தை வழி நடத்தினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். ஆனால் நாம் ஊழல் ஆட்சி புரிந்தால் யார் தலைமை ஏற்றாலும் மக்கள் நம்மை தோக்கடிப்பார்கள்," என்று துன் மகாதீர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.