NATIONAL

முதிர்ச்சி அரசியல்; 'அண்ணன்' கைகோர்த்து, 'தம்பியை' கட்டி அணைத்தார்

18 நவம்பர் 2018, 3:23 AM
முதிர்ச்சி அரசியல்; 'அண்ணன்' கைகோர்த்து, 'தம்பியை' கட்டி அணைத்தார்
முதிர்ச்சி அரசியல்; 'அண்ணன்' கைகோர்த்து, 'தம்பியை' கட்டி அணைத்தார்

ஷா ஆலம், நவம்பர் 18:

'அண்ணன்' (அஸ்மின்) தானாகவே முன்வந்து 'தம்பியை' (ரபிஸி) கைப்பற்றிய பிறகு கட்டி அணைத்துக் கொண்ட காட்சி முதிர்ச்சியான அரசியலை காட்டுகிறது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஸூரைடா கமாரூடின் கூறினார். இந்த நடவடிக்கை மூலம் கட்சி தரமான தலைவர்களை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

" மாநாட்டில் உரையாற்றிய அனைத்து பேராளர்களும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தற்போது நாம் மத்திய அரசாங்கத்தை வழி நடத்தும் கட்சி என்பதை மறந்துவிடக்கூடாது என்று எடுத்துக் கூறினார்கள். இந்த மண்டபத்தில் உள்ள யாரும் கட்சி உடைந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அனைவரும் கட்சியில் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்," என்று ஐடிசிசி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 13-வது தேசிய மாநாட்டில் உரையாற்றும் பொழுது ஸூரைடா கமாரூடின் இவ்வாறு பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.