NATIONAL

சபாநாயகர்:குவார் செம்படாக் சட்ட மன்ற உறுப்பினர் அம்னோவில் இருந்து வெளியேறி சுயேட்சையாக செயல்படுவார்

12 நவம்பர் 2018, 2:53 AM
சபாநாயகர்:குவார் செம்படாக் சட்ட மன்ற உறுப்பினர் அம்னோவில் இருந்து வெளியேறி சுயேட்சையாக செயல்படுவார்

அலோர் ஸ்தார், நவம்பர் 12:

குவார் செம்படாக் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் கூ அப்துல் ரஹ்மான் கூ இஸ்மாயில் அம்னோ தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினராக செயல் பட இருப்பதாக இன்றைய கெடா சட்ட மன்ற கூட்டத் தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கெடா மாநில சட்ட மன்ற சபாநாயகர் டத்தோ அமாட் காசிம் சட்ட மன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

" நேற்று அனுப்பிய கடிதத்தில் குவார் செம்படாக் சட்ட மன்ற உறுப்பினர் எனக்கு தெரிவித்தார். ஆகவே, சட்ட மன்றத்தில் அவரின் இருப்பிடத்தை மாற்ற வேண்டும்," என்று அமாட் காசிம் தெரிவித்தார்.

தகவல்; பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.