NATIONAL

போர்ட் டிக்சன் இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை?

13 செப்டெம்பர் 2018, 9:21 AM
போர்ட் டிக்சன் இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை?

ஷா ஆலம், செப்டம்பர் 13:

கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு அனைத்து நிலையில் நடத்த இருக்கும் கட்சியின் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை வலுத்துள்ளது. கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஷாம்சுல் இஸ்கண்டர் முகமட் அகின் இந்த நடவடிக்கையை பரிந்துரை செய்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் அனைத்து கட்சியின் தலைவர்களும் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்கி வெற்றியை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.

" கெஅடிலான் கட்சியின் ஒருங்கிணைந்த சிந்தனையோடு களம் இறங்கினால் மாபெரும் வெற்றியை பதிவு செய்து, மீண்டும் அன்வார் நாடாளுமன்றத்தில் பவனி வர வழி வகுக்கும். இதன் மூலம் நாடாளுமன்றத்தை மறுமலர்ச்சி ஏற்படுத்த உறுதுணையாக இருப்பார்," என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.