NATIONAL

அஸ்மின்: எச்எஸ்ஆர் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை ஏதும் இல்லை?

8 ஆகஸ்ட் 2018, 1:42 AM
அஸ்மின்: எச்எஸ்ஆர் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை ஏதும் இல்லை?

கோலா லம்பூர், ஆகஸ்ட் 8:

கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) தொடர்பில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சருடன் சந்திப்பு ஏதும் இது வரை இல்லை என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி உறுதிப் படுத்தினார். சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஜூலை 31-க்குள் பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரை செய்திருந்தாலும், மக்களவையின் கூட்டத்தொடர் நடப்பதால் இதைச் செய்ய முடியவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

" போக்குவரத்து அமைச்சுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக நான் அறிவித்தேனா? நான் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்து ஆகஸ்ட் மாதத்தில் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்வேன்," என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.