NATIONAL

பிபிபி, பிஆர்எஸ், பிடிபி & எஸ்யூபிபி பிஎன்-இல் இருந்து ஒன்றாக வெளியேறினார்கள்?

12 ஜூன் 2018, 4:26 AM
பிபிபி, பிஆர்எஸ், பிடிபி & எஸ்யூபிபி பிஎன்-இல் இருந்து ஒன்றாக வெளியேறினார்கள்?

சரவாக், ஜூன் 12:

சரவாக் தேசிய முன்னணியின் அனைத்து உறுப்புக் கட்சிகளும் வெளியேறியதாலு இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி கலைக்கப்பட்டது என்று சரவாக் முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜோஹாரி ஓப்பேங் அறிவித்தார். சரவாக் தேசிய முன்னணி கூட்டணியில் பெசாக்கா பூமிபுத்ரா கட்சி, சரவாக் மக்கள் கூட்டமைப்பு கட்சி, சரவாக் மக்கள் கட்சி மற்றும் ஜனநாயக முற்போக்கு கட்சி ஆகியவை உறுப்புக் கட்சிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணியில் இருந்து  வெளியேறி "சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பு" என்ற புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த முடிவு அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து எடுத்த ஒன்று என்று அபாங் ஜோஹாரி ஓப்பேங் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.