NATIONAL

ஜூலை 16 தொடங்கி 20 நாட்களுக்கு மக்களவை கூட்டத் தொடர்

7 ஜூன் 2018, 2:41 AM
ஜூலை 16 தொடங்கி 20 நாட்களுக்கு மக்களவை கூட்டத் தொடர்

ஷா ஆலம், ஜூன் 7:

14-வது மக்களவையின் முதல் தவணைக்கான முதல் கூட்டம் எதிர் வரும் ஜூலை 16 தொடங்கி 20 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். மகாதீர், மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V அவர்களை சந்தித்து மக்களவை கூட்டத் தொடர் நடத்துவதற்கு அனுமதி பெற இருப்பதாக தெரிவித்தார்.

"  எதிர் வரும் ஜூலை 16-இல் மக்களவை மற்றும் செனட் சபையின்  சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும். இதையடுத்து புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்," என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் மகாதீர் பேசினார்.

ஜூலை 17-இல்  மாமன்னர் மக்களவை கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றுவார் என்றும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.