NATIONAL

தாபோங் ஹஜி முதலீடுகள் மறு ஆய்வு செய்யப்படும் !!

3 ஜூன் 2018, 9:02 AM
தாபோங் ஹஜி முதலீடுகள் மறு ஆய்வு செய்யப்படும் !!

ஷா ஆலாம்,ஜூன்04:

தாபோங் ஹஜி மேற்கொண்ட முதலீடுகள் குறித்து மறு ஆய்வுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அஃது முதலீடு செய்த 1எம்டிபி குறித்து விரைந்து மறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என நாட்டின் முன்னாள் பேங்க் நெகாராவின் துணை இயக்குநர் டாக்டர் ரோஸ்லி யாக்கோப் தெரிவித்தார்.

அவர்கள் மேற்கொண்ட முதலீட்டின் நோக்கம்,இலக்கு உட்பட அதன் சாரம் அனைத்தும் துள்ளியமாய் ஆராயப்படும் என்றும் இதன் மூலம் தாபோங் ஹஜி அதன் உன்னத நோக்கில் பயணிக்கிறதா என்றும் உறுதி செய்ய முடியும் என்றார்.

மேலும்,1எம்டிபி தொடர்பிலும் அர்த்தமற்ற விலையில் நிலம் வாங்கியது தொடர்பில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிய அவர் தாபோங் ஹஜி நல்ல வருமானத்தை பெறுவதையும் அது சரியான இலக்கில் நகர்வதையும் உறுதி செய்யப்படும் என்றார்.

மேலும்,முதலீடு செய்தவர்களுக்கு நலல லாபம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான இன்றைய சூழலுக்கு ஏற்ற முதலீடுகளில் கவனமும் செலுத்தப்படும் என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.