NATIONAL

மலேசிய நம்பிக்கை நிதியம் வெ.27 மில்லியனை எட்டியது !!

3 ஜூன் 2018, 8:32 AM
மலேசிய நம்பிக்கை நிதியம் வெ.27 மில்லியனை எட்டியது !!

ஷா ஆலாம்,ஜூன்04:

நாட்டின் கடனை அடைக்கு உருவாக்கப்பட்ட மலேசிய நம்பிக்கை நிதியம் ( தாபோங் ஹராப்பான் மலேசியா) ஜூன் 3ஆம் தேதி காலை மணி 9.30வரை வெ.27 மில்லியனை எட்டியதாக நிதி அமைச்சு தெரிவித்தது.

நாட்டின் கடனை அடைக்க மக்கள் காட்டிய அக்கறை மற்றும் உணர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு நிதியம் சிறந்த இலக்கை நோக்கி முன்னேறுவதோடு நாட்டு மக்களின் தேச உணர்வும் தொடர்ந்து மேலோங்கி வருவதாகவும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

பினாங்கு மாநில முதல்வர் அலுவலகத்தின் நன்கொடைய பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் உரையாற்றுகையில் லிம் குவான் எங் இதனை கூறினார்.இந்நிகழ்வில் மாநில முதல்வர் சோ கோன் யியோவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொம்தாரில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹிவேன் பெர்ஹாட்,மெக்னி - டெஃக் இண்டாஸ்ரிஸ் பெர்ஹாட் மற்றும் டான்ஸ்ரீ டான் கோக் பிங் ஆகியயோரும் இந்த நிதியத்திற்கு வெ.1 மில்லியனை வழங்கினார்கள்.

இதற்கிடையில்,இத்திட்டம் குறித்து பல்வேறு தரப்பு தங்களின் கருத்துகளை பதிவு செய்த வண்ணம் இருந்தாலும் நாம் இதுவரை வெ.3 மில்லியனை நன்கொடையாக பெற்றிருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் கூறினார்.

மேலும்,மாநில முதல்வர் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் ஊதியத்தில் 10% தாபோங் ஹராப்பான் மலேசியாவிற்கு வழங்கிட முடிவெடுக்கப்பட்டதையும் பினாங்கு மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.