NATIONAL

துன் மகாதீர் முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்

23 மே 2018, 3:04 AM
துன் மகாதீர் முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்
துன் மகாதீர் முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்

புத்ரா ஜெயா, மே 23:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வெற்றிக்கு பிறகு முதலாவது அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கினார். இன்று காலை 9.25-க்கு நடைபெற்ற கூட்டத்தில் புதிய 13 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இக்கூட்டத்தில் நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹாம்ஸா மற்றும் அமைச்சரவை துணை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ மஸிடா அப்துல் மஜீத் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

92-வது வயதில் நாட்டின் ஏழாவது பிரதமராக பதவியேற்று, உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, 1981 முதல் 2003 வரை நாட்டின் நான்காவது பிரதமராக இருந்தபோது மலேசிய நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக துன் டாக்டர் மகாதீர் முகமட் இருந்தார் என்றால் அது மிகையாகாது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.