NATIONAL

அன்வார்: மக்கள் சக்தி நீதியை நிலைநாட்டியது..

17 மே 2018, 2:30 AM
அன்வார்: மக்கள் சக்தி நீதியை நிலைநாட்டியது..
அன்வார்: மக்கள் சக்தி நீதியை நிலைநாட்டியது..

ஷா ஆலம், மே 17:

நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தை வீழ்த்த மக்கள் சக்தியே காரணம். நீதியற்ற மற்றும் மக்களை சிரமமான நிலைக்கு கொண்டு சென்ற தேசிய முன்னணிக்கு சரியான பாடத்தை மக்கள் கற்பித்தனர்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகையில், மக்களின் எழுச்சி நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் தனது விடுதலைக்கு வித்திட்டது என்று விவரித்தார்.

"  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். மூன்று ஆண்டுகள் சம்பளம் இல்லாத விடுமுறையில் இருந்தேன் (சிறைவாசம்). ஆண்டவனின் கிருபையால் மற்றும் உங்களின் முயற்சியால் இங்கு முன் நிற்கிறேன். அப்படி மீண்டும் நஜீப் வெற்றி பெற்றிருந்தால் மீண்டும் சுங்கை பூலோவில் சென்றிருப்பேன்," என்று பாடாங் தீமோரில் நடைபெற்ற மெர்டேக்கா ராக்யாட் மக்கள் பேரணியில் இவ்வாறு கூறினார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.