NATIONAL

அன்வார் இப்ராஹிமிற்கு பொது மன்னிப்பு!!

11 மே 2018, 5:26 AM
அன்வார் இப்ராஹிமிற்கு பொது மன்னிப்பு!!

கோலாலம்பூர்,மே11:

முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பொது மன்னிப்பு வழங்கிட மாமன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பிரதமராக துன் மகாதீர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வின் போது மாமன்னர் இந்த ஒப்புதலை கொடுத்ததாக மகாதீர் குறிப்பிட்டார்.

மாமன்னர் முழுமையான பொது மன்னிப்பு வழங்கிய காரணியத்தால் அன்வார் இப்ராஹிம் விரைந்து அரசியல் செயல்பாட்டில் களமிறங்க முடியும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கி விட்ட நிலையில் அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

அன்வார் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் ஜூன் 8ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருந்த வேளையில் பொது மன்னிப்பின் மூலம் அவர் அதற்கு முன்னரே விடுதலையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.