NATIONAL

சிலாங்கூர் சட்ட மன்ற தொகுதிகளின் பங்கீடு முடிவடைந்தது

16 ஏப்ரல் 2018, 7:13 AM
சிலாங்கூர் சட்ட மன்ற தொகுதிகளின் பங்கீடு முடிவடைந்தது

ஷா ஆலம், ஏப்ரல் 16:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளின் சிலாங்கூர் மாநில சட்ட மன்றங்களின் தொகுதி பங்கீடு சுமூகமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது என்று கூட்டணியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். வேட்பாளர்களின் பெயர்கள் வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

"  ஆண்டவன் ஆசியில் அனைத்தும் நல்லபடியாக முடிந்து விட்டது. வேட்புமனு தாக்கல் நாளை எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கபடும். கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனை கொண்ட தலைவர்களால் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது," என்று ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநிலத்தின் பள்ளிகளுக்கான உதவி நிதிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.