NATIONAL

மே 9 ஆம் தேதி பொதுத் தேர்தல்

10 ஏப்ரல் 2018, 4:55 AM
மே 9 ஆம் தேதி பொதுத் தேர்தல்

புத்ராஜெயா, ஏப்ரல் 10:

மே 9ஆம் தேதி நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததன் மூலம் நாட்டின் 14வது பொதுத் தேர்தல் எப்போது எனும் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தினத்தை மே 9 என அறிவித்த வேளையில் தபால்வழி வாக்களிக்கும் நாள் மே 5ஆம் தேதி என்றும் அந்த ஆணையம் தெரிவித்தது.

தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் தேர்தல் பிரச்சாரம் 11 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து மே 8 ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இத்தகவலை தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹசிம் அப்துல்லா தெரிவித்தார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் 14,940,624 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வழக்கம் போலவே 222 நாடாளுமன்றத்திற்கும் 505 சட்டமன்றத்திற்கும் வாக்களிப்பர் என்றும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.