NATIONAL

கெஅடிலான், புத்ரா ஜெயாவை நோக்கி தேர்தல் எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது!!!

8 ஏப்ரல் 2018, 12:11 PM
கெஅடிலான், புத்ரா ஜெயாவை நோக்கி தேர்தல் எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது!!!
கெஅடிலான், புத்ரா ஜெயாவை நோக்கி தேர்தல் எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது!!!
கெஅடிலான், புத்ரா ஜெயாவை நோக்கி தேர்தல் எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது!!!

ஷா ஆலம் , ஏப்ரல் 8:

தேசிய முன்னணியின் பொய்யான பரப்புரையையும் மீறி இன்று மக்கள் நீதிக்கட்சியின் தலைமைத்துவம் பலமாக உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

"  தேசிய முன்னணி தலைவர்கள் நமக்கு பொருளாதார நிர்வாகம் தெரியவில்லை என்றார்கள். மாநில அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் திறன் இல்லை என்று மட்டம் தட்டினார்கள். ஆனாலும், கெஅடிலான் இன்று சிலாங்கூர் மாநிலத்தை திறன்மிக்க முறையில் நிர்வாகம் செய்து வருகிறது. அம்னோ தேசிய முன்னணியை பல மடங்கு சிறந்த அடைவு நிலையைக் கொண்டிருக்கிறது," என்று 14-வது பொதுத் தேர்தலுக்கான கெஅடிலான் கட்சியின் தேர்தல் இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிகழ்ச்சியில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

 

 

[caption id="attachment_222448" align="alignright" width="478"] டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் [/caption]

 

 

 

 

கெஅடிலான் கட்சியின் பொதுச்செயலாளர் சைப்பூஃடின் நாசூத்தியோன் பேசுகையில், எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலே அம்னோ தேசிய முன்னணி புத்ரா ஜெயாவை ஆளும் இறுதி வாய்ப்பாகும் என்றார். கடந்த 19 ஆண்டுகளில் இதுவரை இப்படி ஒரு தேர்தல் ஏற்பாடுகளை செய்தது கிடையாது. 14-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு மிகச் சிறந்த முறையில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருப்பதாக சைப்பூஃடின்  தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.