NATIONAL

14-வது பொதுத் தேர்தல்:பாக்காத்தான் கெஅடிலான் சின்னத்தை பயன்படுத்தும் !!!

6 ஏப்ரல் 2018, 2:36 PM
14-வது பொதுத் தேர்தல்:பாக்காத்தான் கெஅடிலான் சின்னத்தை பயன்படுத்தும் !!!
14-வது பொதுத் தேர்தல்:பாக்காத்தான் கெஅடிலான் சின்னத்தை பயன்படுத்தும் !!!

பாசீர் கூடாங், ஏப்ரல் 6:

வெகு விரைவில் நடக்கவிருக்கும் 14-வது பொது தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, மக்கள் நீதிக்கட்சியின் (கெஅடிலான்) சின்னத்தை பயன்படுத்தும் என பாக்காத்தானின் தலைமை ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று இரவு தாமான் டால்யாவில் நடந்த பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சூறாவளி பயணம் நிகழ்ச்சியில் சூசகமாக    அறிவித்தார். மேலும் கூறுகையில், மகாதீர் தமது தரப்பினர் கடந்த மூன்று மாதங்களாக எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற நிலையில் இருந்ததாக கூறினார்.

"  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்த முடியாது. ஆனாலும், நான்கு கட்சிகளும் ஒரே சின்னம் பயன்படுத்த யாரும் தடுக்க முடியாது. இருந்தாலும், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் உள்ள உறுப்புக் கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது சுலபம் அல்ல. 1969-இல் இருந்து ஜசெக ரோக்கேட் சின்னத்தை பயன்படுத்தி வருகின்றனர். நான்கு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி உறுப்புக் கட்சிகளும் ஒரே சின்னத்தை பயன்படுத்த இருக்கிறோம். எதிர் வரும் 14-வது பொது தேர்தலில் மக்கள் நீதிக்கட்சியின் சின்னத்தை நாம் பயன்படுத்த இருக்கிறோம்," என்று பலத்த கரவொலி இடையே மகாதீர் தெரிவித்தார்.

அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்த வேளையில், மலேசியர் அனைவரும் எதிர் வரும் 14-வது பொது தேர்தலில் கெஅடிலான் கட்சியின் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.