NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: ஏமாற்று வேலைகள் இல்லை என்றால் பாக்காத்தான் வெற்றி பெறும்.

6 ஏப்ரல் 2018, 5:29 AM
14-வது பொதுத் தேர்தல்: ஏமாற்று வேலைகள் இல்லை என்றால் பாக்காத்தான் வெற்றி பெறும்.

ஷா ஆலம் , ஏப்ரல் 6:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். தேசிய முன்னணியின் ஏமாற்று வேலைகள் இல்லை என்றால் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கெஅடிலான் கட்சியின் வியூக இயக்குனர் சிம் திஸி ஸின் கூறினார். மெர்டேக்கா சென்டர் மற்றும் இன்வோக் நடத்திய ஆய்வில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதை காட்டுகிறது என்று தெரிவித்தார்.

"  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கெஅடிலான் கட்சியின் அவைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோரின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது," என்று சிலாங்கூர் இன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.