NATIONAL

மக்களை மதியுங்கள்; நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்பவர் நோ ஓமார் அல்ல - அஸ்மின்

10 மார்ச் 2018, 9:13 AM
மக்களை மதியுங்கள்; நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்பவர் நோ ஓமார் அல்ல - அஸ்மின்
மக்களை மதியுங்கள்; நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்பவர் நோ ஓமார் அல்ல - அஸ்மின்

அம்பாங், மார்ச் 10:

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சமூக நலம் சார்ந்த திட்டங்களை முடிவு எடுக்க கூடிய அதிகாரம் நாட்டு மக்களுக்கே உள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். திறன்மிக்க நிர்வாகம் கொண்ட மலேசிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க நாட்டு மக்களுக்கு விவேகமும் மற்றும் சரியான தேர்வு செய்யக்கூடிய ஆற்றலும் இருக்கிறது என்றார்.

மலேசிய மக்களுக்கு நோ ஓமார் போன்ற அம்னோ தலைவர்களின்  எதிரமறையான கருத்துக்கள் மற்றும்  அவதூறுகளும் தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

"  நாம் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி. மலேசிய மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். நமது கொள்கைகளை மதிப்பீடு செய்ய பொது மக்களிடம் விட்டு விடுகிறோம். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்வது நோ ஓமார் அல்ல, மாறாக நாட்டு மக்களின் விவேகமான தேர்வை மதிக்க வேண்டும். மக்கள் மாநிலம் மற்றும் நாட்டிற்கு மேம்பாடு மற்றும் வளர்ச்சியை கொண்டு வரும் கட்சியை தேர்ந்தெடுப்பதில் வல்லமை கொண்டவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்று அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கொண்டு வந்த தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாகயில்லை மற்றும் வெறும் வாக்குகளை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்ற கூற்றை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறினார்.

#தமிழ் பிரியன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.