NATIONAL

மத்திய அரசாங்கம் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் !!!

5 மார்ச் 2018, 9:22 AM
மத்திய அரசாங்கம் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் !!!

கோலா லம்பூர் , மார்ச் 5:

மத்திய அரசாங்கம் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V வலியுறுத்தினார். தற்போது மலேசிய மக்கள் பொது போக்குவரத்து சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, இந்த சேவையை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசாங்கம் இலகு இரயில் சேவையான எம்ஆர்டி மற்றும் எல்ஆர்டி போன்ற திட்டங்களை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில்  செயல்படுத்தி வருகிறது. சிலாங்கூர் மாநில அரசாங்கம், இதற்கு மேலாக ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையை சிலாங்கூர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தி வருகிறது. சிலாங்கூர் மாநிலம் மலேசியாவிலேயே இலவச பேருந்து திட்டத்தை திறன்மிக்க முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் பிரியன்

=EZY=

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.