NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு பல்வேறு தகுதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்!!!

29 ஜனவரி 2018, 9:48 AM
14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு பல்வேறு தகுதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்!!!

ஷா ஆலம், ஜனவரி 29:

எதிர் வரும் 14-வது பொதுத்  தேர்தலில் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப் படும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

"   வேட்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனாலும் கொள்கை அடிப்படையில் வேட்பாளர் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் நாளுக்கு முன்பு முடிந்துவிடும். ஆனாலும், அப்படி தேர்தல் ஏப்ரல் மாதம் நடந்தால், வேட்பாளர் மற்றும் இட ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும்," என்று ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற மாதாந்திர அரசு ஊழியர்களின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு பேசினார்.

எதிர் வரும் ஜனவரி 31-க்குள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என்று முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் பிரியன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.