SELANGOR

கீஸ்: மகளிருக்கு ரிம 72 மில்லியன் ஒதுக்கீடு; சிலாங்கூர் மகளிருக்கு முக்கியத்துவம்

22 ஜனவரி 2018, 7:55 AM
கீஸ்: மகளிருக்கு ரிம 72 மில்லியன் ஒதுக்கீடு; சிலாங்கூர் மகளிருக்கு முக்கியத்துவம்
கீஸ்: மகளிருக்கு ரிம 72 மில்லியன் ஒதுக்கீடு; சிலாங்கூர் மகளிருக்கு முக்கியத்துவம்
கீஸ்: மகளிருக்கு ரிம 72 மில்லியன் ஒதுக்கீடு; சிலாங்கூர் மகளிருக்கு முக்கியத்துவம்

கோலா சிலாங்கூர், ஜனவரி 22:

அன்புத் தாய் விவேக சிலாங்கூர் (கீஸ்) அட்டை திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம 72 பில்லியனை மகளிர் மற்றும் தாய்மார்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த நாட்டில் மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்காக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலமாக சிலாங்கூர் மாநிலம் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் கூறினார்.

"   கீஸ் அட்டை திட்டத்தின் வழி  மாதந்தோறும் ரிம 200 அல்லது வருடத்திற்கு ரிம 2400-ஐ பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ் அடிப்படை பொருட்களான அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை மற்றும் பள்ளி சீருடைகள் போன்றவைகளை 500 பதிவு பெற்ற பேரங்காடி அல்லது கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். ஜயன்ட் பேரங்காடி , 99 ஸ்பீட்மார்ட் மற்றும் ஹாரி ஹாரி துணிகள் மையம் போன்ற இடங்களில் கீழ் பங்கேற்பாளர்கள் பொருட்களை வாங்கலாம் ," என்று பெர்மாத்தாங் பொது மைதானத்தில் நடைபெற்ற கீஸ் அட்டை திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார். சுமார் 1000 பொது மக்கள் திரளாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பலத்த கரவொலி இடையே தெரிவித்தார்.

 

 

 

 

 

இந்நிகழ்ச்சியில் மாநில அரசாங்கத்தின் செயலாளர் டத்தோ முகமட் அமீன் அமாட் ஆயா, மாநில நிதி அதிகாரி டத்தோ நோர் அஸ்மி, மாநில சட்ட ஆலோசகர் டத்தோ நிக் சுஹாய்மி நிக் சுலைமான் மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் டாக்டர் டரோயா அல்வி, எலிசபெத் வோங், அமிரூடின் ஷாரி மற்றும் டத்தோ டாக்டர் அமாட் யூனூஸ் ஹைரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீஸ் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் ரிம 2000-க்கும் குறைவான  வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.