NATIONAL

பாக்காத்தான் ஹாராப்பான் சின்னம் கிடைப்பதில் பெரும் சிக்கல்!!!

7 ஜனவரி 2018, 10:50 AM
பாக்காத்தான் ஹாராப்பான் சின்னம் கிடைப்பதில் பெரும் சிக்கல்!!!

ஷா ஆலம், ஜனவரி 7:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சின்னம் கிடைக்காது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கணிக்கிறார். எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கும் சின்னம் ஒப்புதல் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகரான துன் டாக்டர் மகாதீர் முகமட், தமது கட்சியினர் சங்க பதிவதிகாரியுடன் விண்ணப்பம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்றார்.

"   தேர்தலுக்கு முதல் நாள் சின்னத்திற்கு ஒப்புதல் கொடுத்தாலும் நமக்கு சிக்கல் தான். பொது மக்கள் குழப்பம் அடையக் கூடாது. எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போட வேண்டும் என்று குழம்பக்கூடாது ( சின்னம் கடைசி நேரத்தில் கிடைத்தால்)," என்று விவரித்தார். துன் டாக்டர் மகாதீர் முகமட் ஐடீல் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#தமிழ் பிரியன்

=EZY=

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.