NATIONAL

பாலி மற்றும் ஹாங்காங் உல்லாசத் தலத்தில் நடந்த எஸ்பிஆர்எம் விவகாரத்தை கெஅடிலான் காவல்துறையில் புகார் செய்தது

6 டிசம்பர் 2017, 9:00 AM
பாலி மற்றும் ஹாங்காங் உல்லாசத் தலத்தில் நடந்த எஸ்பிஆர்எம் விவகாரத்தை கெஅடிலான் காவல்துறையில் புகார் செய்தது

ஷா ஆலம், டிசம்பர் 6:

நேற்று மாலை கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பேராசிரியர் முனைவர் ஷாரூடின் படாரூடின் தமக்கு பாலி மற்றும் ஹாங்காங் போன்ற உல்லாசத் தீவுகளில் எஸ்பிஆர்எம் சம்பந்தப் பட்ட உயர்மட்ட அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய ஒரு 'பென் டிரைவ்' மற்றும் எழுத்துடன் கூடிய தாள் ஒன்றும் தனது வீட்டின் தபால் பெட்டியில் இருந்ததாக காவல்துறையிடம் புகார் செய்தார். நேற்று காலை ஏறக்குறைய 9 மணி அளவில் தனது காஜாங் சுங்கை மெராப் வீட்டின் தபால் பெட்டியில் இருந்ததாக மாலை 4.15 மணிக்கு புகார் கொடுத்த போது தெரிவித்தார்.

"  காவல்துறையிடம் புகார் செய்து இந்த விடயத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விவரங்கள் அடங்கிய அஞ்சல் உறையை கொடுத்து விட்டேன். தபால் பெட்டியில் இதைப் பார்த்தாலும் 'பென் டிரைவ்' உள்ளே என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது எனக்கு சம்பந்தப் பட்ட விஷயம் அல்ல. காவல்துறை அதிகாரிகள் இதை நன்கு விசாரிக்க வேண்டும்," என்று  ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமையகம் முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

#வீரத் தமிழன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.