SELANGOR

14-வது பொதுத் தேர்தல்: மார்ச் மாதத்தில் போராடத் தயார்!!!

23 நவம்பர் 2017, 1:51 AM
14-வது பொதுத் தேர்தல்: மார்ச் மாதத்தில் போராடத் தயார்!!!

ஷா ஆலம், நவம்பர் 23:

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, 14-வது பொதுத் தேர்தல் மார்ச் 2018-இல் நடத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இதற்கு முன்பு, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடக்கும் என்று தகவல் வந்ததாகவும், ஆனால் தற்போது மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

"   புதிய தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை நின்ற காரணம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஆகும். இந்த விடயத்தில் நாம் பாதி வெற்றி அடைந்து விட்டோம். இதில் தோல்வி அடைந்தாலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செல்வோம். ஆனால் நிலைமையை  நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லா இடங்களிலும் நம்மை தடுத்து, வழக்கில் வெற்றி பெற்று விடுவார்கள்," என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற 2018-இன் சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

#வீரத் தமிழன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.