NATIONAL

'நிர்வாணக் கோலம்', புங் மன்னிப்பு கோர வேண்டும்

21 நவம்பர் 2017, 6:57 AM
'நிர்வாணக் கோலம்', புங் மன்னிப்பு கோர வேண்டும்

கோலா லம்பூர், நவம்பர் 21:

தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ புங் மொக்தார் ராடின் மலேசிய நாட்டு மகளிரை காம உணர்வோடு பேசி இருப்பதை கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சீ கடுமையாக கண்டித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது புங் மொக்தார் ராடின் மகளிரை சுட்டிக்காட்டி 'நிர்வாணக் கோலம்' என்று எடுத்துரைத்த கூற்று முற்றிலும் கேவலப்படுத்தும் செயல் என்றார்.

மேலும் சொன்னால், கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான புங் மொக்தார் ராடினின் மகளிரை அவமதிக்கும்  செயல் இது முதல் முறையல்ல என்று வன்மையாக சாடினார். இந்த விடயத்தில் மகளிரிடம் புங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

#வீரத் தமிழன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.