SELANGOR

கெடா, சங்லூனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்தது

15 நவம்பர் 2017, 9:31 AM
கெடா, சங்லூனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்தது

அலோர் ஸ்தார், நவம்பர் 15:

சங்லூன் வெள்ள நிலவரம் நேற்று மாலை வரை மோசமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்வு கண்டது. இதற்கு முன்பு இது 157 ஆக இருந்தது என்று பொது தற்காப்பு படையின் குபாங் பாசு மாவட்டத்தின் அதிகாரி கமாரூல்ஸாமான் காசா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை சங்லூன் தேசிய இடைநிலைப்பள்ளியில் தற்காலிக நிவாரண இடமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

கம்போங் பெலுகார், கம்போங் நாங் மா, கம்போங் சங்காட் செதோய், கம்போங் பாரூ, கம்போங் பெதோங், கம்போங் வாங் மேரா, கம்போங் பாயா நோங்மி மற்றும் கம்போங் குபாங் காயு ஆகிய எட்டு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

#வீரத் தமிழன்

SUMBER: BERNAMA

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.