NATIONAL

மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜாயிடம் விசாரணை

30 செப்டெம்பர் 2017, 2:04 PM
மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜாயிடம் விசாரணை

கோலா லம்பூர், செப்டம்பர் 30:

மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜாயிம் அவர்களின் அரசியல் செயலாளர் (61 வயது) ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார். அவரை 6 நாட்களுக்குத் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து இன்று புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்த மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் அவர்களிடம் 10 மணி நேரம் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மனித வள அமைச்சின் கைத்திறன் மேம்பாட்டு நிதியில் (Skills Development Fund Corp) 40 மில்லியன் ரிங்கிட் கையாடல் நடந்து இருக்கலாம் என எழுந்து இருக்கும் புகார்களைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணைகளைத் தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்தக் கையாடல்கள் கட்டம் கட்டமாக நடந்தேறி இருப்பதாக நம்பப் படுகிறது.

நேற்று காலை 10.00 மணி அளவில் புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நுழைந்த அமைச்சர் ரியோட் இரவு 8.00 மணி அளவில் தான் வெளியில் வந்தார்.

இந்த விசாரணை தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் கைத்திறன் மேம்பாட்டு நிதி வாரியத்தின் அதிகாரிகள் ஆவார்.

#தமிழ் முத்துக்கள்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.