NATIONAL

மலாக்காவில் விஷவாயுக் கசிவு, 240 பேர் வீடு திரும்ப அனுமதி

30 செப்டெம்பர் 2017, 1:17 AM
மலாக்காவில் விஷவாயுக் கசிவு, 240 பேர் வீடு திரும்ப அனுமதி

மலாக்காவில் விஷவாயுக் கசிவு 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மலாக்கா – கம்போங் தம்பா பாயா பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 5 மணி வரை ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இது குறித்து மலாக்கா பேரிடர் நிர்வாகக் குழுச் செயலாளர் லெப்டினன்ட் கால்னல் எபெண்டி அலி கூறுகையில் 50 பேரில் 32 பேர் மலாக்கா மருத்துவமனையிலும் மீதம் 18 பேர் ஜாசின் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

பீப்பாய் ஒன்றில் இருந்த குளோரின் வாயு காற்றில் பரவி 1 கிலோமீட்டர் பரப்பளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், நேற்று மாலை 6 மணியளவில் அது போல் 10 பீப்பாய்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, ஏறக்குறைய 240 கிராம மக்கள் தம்பாக் பாயா தேசிய பள்ளியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரவு 10 மணிக்கு  வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: பெர்னாமா & செல்லியல்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.