NATIONAL

இது தலிபான் மாநிலம் கிடையாது, ஜோகூர் சுல்தான் கண்டனம்

27 செப்டெம்பர் 2017, 9:33 AM
இது தலிபான் மாநிலம் கிடையாது, ஜோகூர் சுல்தான் கண்டனம்

ஜோகூர் பாரு, செப்டம்பர் 27:

ஜோகூர், மூவாரில் சர்ச்சைக்குள்ளான  "முஸ்லிம் மட்டும்" துணி துவைக்கும் கடை உடனடியாக தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்தக் கடையை மூட வேண்டும் என்றும் ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டு இருக்கிறார்.

“என்னால் இந்த முட்டாள் தனத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜோகூர். எல்லா இனங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பொதுவானது. இது ஒரு வளர்ச்சியடைந்த நாகரீக மற்றும் முன்னேற்றத்தில் செல்லும் மாநிலம்.”

“இது ஒரு தலிபான் மாநிலம் கிடையாது. ஜோகூர் இஸ்லாம் தலைவர் என்ற முறையில் இந்த விவகாரத்தைப் பார்க்கும் போது இது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில்... அடிப்படையில் தீவிரவாதப் போக்காதத் தெரிகிறது” என்று ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் தெரிவித்து இருக்கிறார்.

நன்றி: செல்லியல்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.