NATIONAL

வான் அஸிஸா : அன்வார் எச்கெஎல்-இல் ஆரோக்கியமாக இருக்கிறார்

16 ஜூன் 2017, 2:01 AM
வான் அஸிஸா : அன்வார் எச்கெஎல்-இல் ஆரோக்கியமாக இருக்கிறார்

செகாம்பூட், ஜூன் 16:

கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடல்நிலை கோலா லம்பூர் மருத்துவமனையின் (எச்கெஎல்) சிகிச்சைக்கு பிறகு ஆரோக்கியமாக இருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார். வலது தோள் பட்டையில் ஏற்பட்ட வலியினால் பிசியோதெரபி தொடர் சிகிச்சை மேற்கொண்டதாக கூறினார்.

" தற்போது அன்வாரின் உடல்நிலை சீராக உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நோன்பு துறந்த பிறகு தொழுகையும் மேற்கொண்ட வேளையில் இரவு 8 மணிக்கு அதிகாரிகள் எங்களை வீடு திரும்ப கேட்டுக் கொண்டனர். மருத்துவமனையின் அறிக்கை படி உடல்நிலை மேலும் சீரான நிலையில் சனிக்கிழமை அன்வார் அவர்கள் சிறைச்சாலைக்கு திரும்புவார்," என்று புக்கிட் செகாம்பூட் இல்லத்தில் நடைபெற்ற நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று மாலை அன்வார் இரத்த அழுத்தம் குறைவான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்வாரின் வழக்கறிஞர் நா.சுரேந்திரன் அதிகாரிகள் அவரின் சிகிச்சையை துரிதப்படுத்துமாறும் மற்றும் மருத்துவ அறிக்கை தேவைப்படுவதாகவும் கூறினார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.