NATIONAL

எலிட் நெடுஞ்சாலையில் மாற்றுப் பாதை, மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

9 ஜூன் 2017, 8:30 AM
எலிட் நெடுஞ்சாலையில் மாற்றுப் பாதை, மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 9:

உசாஹாசாமா நெடுஞ்சாலை திட்ட நிறுவனம் (பிளஸ்) ஜூன் 13-இல் இருந்து 15-வரை ஒரு மாற்று சாலையை வடக்கு தெற்கு மற்றும் மத்திய தொடர்பு நெடுஞ்சாலையில் (எலிட்) அமைக்கும் என்று அறிவித்துள்ளது. பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த மாற்றுப் பாதை கிலோமீட்டர் 35.5-இல் இருந்து கிலோமீட்டர் 34.5-இல் வடக்கு நீலாய்-கெஎல்ஐஏ சந்திப்பில் இரவு மணி 11-இல் இருந்து காலை மணி  5 வரை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிளஸ் நிறுவனம் எல்லா பயனீட்டாளர்களையும் சரியான முறையில் நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளையில் பிளஸ் நிறுவனம் தொடர்ந்து நல்ல ஒத்துழைப்பு வழங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்துகிறது என்று அறிக்கையில் கூறியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.