NATIONAL

கெஅடிலான் அடாம் ரொஸ்லியின் விசாரணையை எஸ்பிஆர்எம்-விடம் விட்டு விட்டது

9 மே 2017, 9:16 AM
கெஅடிலான் அடாம் ரொஸ்லியின் விசாரணையை  எஸ்பிஆர்எம்-விடம் விட்டு விட்டது

ஷா ஆலம், மே 9:

கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கட்சியில் உயர்மட்ட அளவில் பிரச்சனைகள் இருப்பதாக எழுந்துள்ள செய்திகளை மறுத்தார். அடாம் ரொஸ்லியின் ஊழல் விசாரணையை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கட்சியில் கருத்து வேறுபாடுகள்  உலவி வருகின்றன என்ற செய்தியில் உண்மையில்லை என்றார்.

"   எந்த  ஒரு சண்டைகளும் நடக்கவில்லை.  இது வெறும் ஊடகங்களின் சித்து விளையாட்டு," என்று ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

இதையடுத்து கூறுகையில், அஸ்மின் அலி அடாம் ரொஸ்லியின் ஊழல் வழக்கை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டு விடுவதாக கூறினார். ஆனால் பொது மக்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் எனவும் வழக்கு விசாரணை முடிவு வரும் வரை எந்த ஒரு ஊகங்களை பரப்ப வேண்டாம்.

"   சட்ட நடைமுறைகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். ஆனால் சட்டத்தில் வழக்கு விசாரணையை எதிர் நோக்குவோர் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகே குற்றவாளி ஆவார்," என்று கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.