NATIONAL

பெர்சத்து அம்னோ மலாய்காரர்களின் வாக்குகளை பெற்று தரும்

1 மே 2017, 1:29 AM
பெர்சத்து அம்னோ மலாய்காரர்களின் வாக்குகளை பெற்று தரும்
பெர்சத்து அம்னோ மலாய்காரர்களின் வாக்குகளை பெற்று தரும்

பெட்டாலிங் ஜெயா, மே 1:

அம்னோ தேசிய முன்னணி  (பிஎன்) ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சந்திப்பு கூட்டத்தை மலாய்காரர்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் போக்கை கண்டிக்கிறது.

பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் ஆலோசகர், துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகையில், பாக்காத்தான் கூட்டங்களில் மக்களின் வருகை 12,000 இருந்து 15,000 வரையில் இருப்பதாகவும்  இது மக்களின் மாபெரும்  ஆதரவு கிடைப்பதாக காட்டுகிறது என்றார்.

"பாக்காத்தான் கூட்டங்களில் மலாய்காரர்களின் வருகை 15,000 வரை எட்டினாலும் "டிவி தீகா சுகு" 200 ஆகத்தான் கணக்கை காட்டும், ஏனெனில்  அவர்களுக்கு கணக்கு சரியாக தெரியாது. நமது கூட்டங்களில் நிறைய மலாய்காரர்கள் வெளிவரும் வேளையில்  அதில் பெரும்பாலும் அம்னோவினரே. ஆக  அம்னோ மலாய்காரர்கள்  எங்களை விரும்புகிறார்கள். இதனால் மலாய்காரர்கள் ஆதரவு கிடைக்கும் என்றும், நாம் வெற்றி பெறுவதற்கான தருணம் இது," என்று தெரிவித்தார்.

மகாதீர் மேற்கண்ட செய்தி செய்திகளை சிலாங்கூர் அறவாரிய கட்டிடத்தில் உள்ள பெர்சத்து அலுவலகத்தில் நடந்த பாக்காத்தான் தலைவர்களின் கூட்டத்திற்கு பின்  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதற்கு முன்பு பெர்சத்து தலைவர், டான்ஸ்ரீ முஹீடின் யாசின் பேசுகையில் பெர்சத்து கட்சியின் அங்கத்தினர்கள் வெளியாகிறார்கள் என்ற அம்னோ  ஊடகங்களின் செய்திகள் ஒன்றும் புதிதல்ல  ஏனெனில் தேர்தல் நெருங்கிக் கொண்டு  இருக்கிறதுஎன்று தெளிவுபடுத்தினார்.

MUHYIDDIN BERSATU

 

 

 

 

உண்மையில் பெர்சத்துவின் அங்கத்தினர்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 1000-த்தை தாண்டிச் செல்கிறது என்று தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.