NATIONAL

அடாம் ரோஸ்லி விவகாரம் எஸ்பிஆர்எம் விசாரிக்கட்டும்

16 ஏப்ரல் 2017, 5:58 AM
அடாம் ரோஸ்லி விவகாரம் எஸ்பிஆர்எம் விசாரிக்கட்டும்

ஷா ஆலாம் - விசாரணையின் முடியும் அது குறித்த இறுதிகட்ட விசாரணையின் முடிவும் கிடைக்கும் வரை யாரும் யாரையும் குற்றவாளியாய் வகைப்படுத்த வேண்டாம் என கெஅடிலான் கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நினைவுறுத்தினார்.

அம்பாங் இளைஞர் அணி தலைவர் அடாம் ரோஸ்லியின் விவகாரம் குறித்தும் யாரும் பல்வேறு யூகங்கள் நிலையில் தங்களின் கருத்தினை முன் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர் மலேசிய லஞ்சம் மற்றும்  ஊழல் வாரியம் அதன் விசாரணையை முழுமையாக முடிக்கும் வரை காத்திருக்கும் படியும் அவர் அறிவுறுத்தினார்.

ஒருவர் மீது விசாரணை நடைபெறுவதெல்லாம் இயல்பானதே என்றும் கூறிய அவர் விசாரணையின் முடிவில் எஸ்பிஆர்எம் வெளியிடும் முடிவே இறுதியானது என்றார்.எனவே,அடாம் ரோஸ்லி விவகாரத்தில் தேவையற்ற யூகங்களை பரவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அடாம் ரோஸ்லி விவகாரத்தை எஸ்பிஆர்எம் விசாரணைக்கே விட்டுவிடுவதாகவும் அவர்கள் சுதந்திரமாய்  அதனை விசாரிக்கும் வகையில் இதில் யாரும் எவ்வித அர்த்தமற்ற கருத்தினையும் வெளியிட வேண்டாம் என்றும் நினைவுறுத்தினார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.