NATIONAL

தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை மக்கள் நம்பிட வேண்டாம்

10 ஏப்ரல் 2017, 10:15 AM
தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை மக்கள் நம்பிட வேண்டாம்
தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை மக்கள் நம்பிட வேண்டாம்

ஷா ஆலாம் - நாட்டின் 13வது பொது தேர்தல் வாக்குறுதியை தேசிய முன்னணி அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில் அதன் 14வது பொது தேர்தல் வாக்குறுதியையும் தேர்தல் அறிக்கையையும் நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பேங் நெகாராவின் முன்னால் துணை ஆணையர் நினைவுறுத்தினார்.

தேர்தல் காலத்திலும் அதன் தேர்தல் அறிக்கையிலும் தேசிய முன்னணி முன் வைத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் மக்கள் தொடர்ந்து தேசிய முன்னணியை ஆதரிக்க வேண்டுமா என்பதை மக்கள் விவேகமாய் சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கடந்தக்கால படிப்பினையை அனுபவமாய் கொண்டு நாட்டின் 14வது பொது தேர்தலில் மக்கள் தேசிய முன்னணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாத நிலையில் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் பொய்களையும் கற்பனையையும் கலந்தது என்று மக்கள் உணர வேண்டும் என்றார்.

இம்மாதிரி கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும் அதனை அலட்சியம் செய்யும் செயல்பாடுகளும் தொடர்ந்து தேசிய முன்னணி அரசால் மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது.இது முதன் முறையல்ல.பல முறை நிகழ்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

dr_rosli_yaakob_

 

-nR-

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.