கோலாலம்பூர், நவ 11 : நவம்பர் 12 முதல் நவம்பர் 18 வரையிலான எரிபொருள் சில்லறை விலையில், RON97 பெட்ரோல் விலை 50 சென்னும், உதவித் தொகை இல்லாத RON95 பெட்ரோல் விலை 40 சென்னும், உதவித் தொகை இல்லாத டீசல் விலை 25 சென்னும் குறைவதாக நிதி அமைச்சு அறிவித்தது.
அந்த புதிய விலையின்படி, உதவித் தொகை இல்லாத RON97 பெட்ரோல் லிட்டருக்கு RM4.20 ஆகவும், உதவித் தொகை இல்லாத RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM3.87 ஆகவும், உதவித் தொகை இல்லாத டீசல் லிட்டருக்கு RM4.87 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பூடி மடானி (BUDI MADANI) திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கான உதவித் தொகையுடன் கூடிய RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 ஆகவும், டீசல் லிட்டருக்கு RM2.10 ஆகவும் எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கிறது.
மேலும், கட்டுப்பாட்டு அமைப்புகளின் (SKPS & SKDS) கீழ் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் முறையே RM2.05 மற்றும் RM2.15 ஆக மாறாமல் தொடர்கின்றன.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் வட்டாரத்துவ சந்தையில் எரிபொருள் விநியோகம் அதிகரித்ததே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ஈரான் மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் இன்னும் நீடிப்பதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.



