காஜாங், தாமான் ஜாஸ்மின் நிலச்சரிவு: 8 குடும்பங்கள் வீடு திரும்ப அனுமதி

10 நவம்பர் 2026, 10:37 AM
காஜாங், தாமான் ஜாஸ்மின் நிலச்சரிவு:  8 குடும்பங்கள் வீடு திரும்ப அனுமதி
காஜாங், தாமான் ஜாஸ்மின் நிலச்சரிவு:  8 குடும்பங்கள் வீடு திரும்ப அனுமதி

ஷா ஆலாம், நவம்பர் 10 - காஜாங், தாமான் ஜாஸ்மினில் உள்ள ஜாலான் ஜாஸ்மின் 21 பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்கள், தங்களது வீடுகள் பாதுகாப்பாக இருப்பது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும் காஜாங் நகராண்மைக் கழகத்தின் (MPKj) பொறியியல் துறைக்கும் இடையே இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது என்று காஜாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கூறினார்.

குடியிருப்புகளின் கட்டமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதால் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நகராண்மைக் கழகம் உடனடியாக பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கும் என்றும், இப்பணிகள் நிறைவடைய குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்றும் சியோங் குறிப்பிட்டார்.

எனினும், பழுதுபார்க்கும் குறிப்பிட்ட முறை, நிபுணர்களால் நடத்தப்படும் மண் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுமென்றாரவர்.

முன்னதாக, டேவிட் சியோங் மற்றும் நகராண்மைக் குழு உறுப்பினர் ஓங் செங் பெங் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) மாலை 7 மணியளவில் கனமழையின் போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. குடியிருப்புகளுக்குப் பின்னால் இருந்த ஒரு பகுதி சரிந்து விழுந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 வீடுகளைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.