கோலாலம்பூர், 8 மாநிலங்களில் மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

10 நவம்பர் 2026, 7:34 AM
கோலாலம்பூர், 8 மாநிலங்களில் மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

ஷா ஆலாம், நவ 10 : இன்று மாலை 5 மணி வரை கோலாலம்பூர் மற்றும் நாட்டின் எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசமான வானிலை பெர்லிஸ் மாநிலம் முழுவதும், நெகிரி செம்பிலானில் ஜெலுபு, மற்றும் கெடாவில் குபாங் பாசு, பாடாங் தெராப், பொக்கோக் செனா ஆகிய மாவட்டங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங்கில் மாரான், பெரா, தெமர்லோ, பெந்தோங் ஆகிய பகுதிகளும், சிலாங்கூரில் கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், உலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளும், ஜொகூரில் பொந்தியான், ஜொகூர் பாரு, கூலாய், மெர்சிங் ஆகிய இடங்களும் இந்த எச்சரிக்கையின் கீழ் வருகின்றன.

மேலும், சரவாக்கில் லிம்பாங், மிரி (மாருடி) ஆகிய பகுதிகளுக்கும், சபாவின் உட்பகுதி மற்றும் மேற்கு கடற்கரையில் தாவாவ், பென்சியாங்கான், தம்புனான் ஆகிய பகுதிகளுக்கும் இதே போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாக திடீர் வெள்ளம், மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.