வெள்ளப் பாதிப்பை அடுத்து புஞ்சாக் ஆலாமில் மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக நிறுத்தம்

6 நவம்பர் 2026, 2:51 PM
வெள்ளப் பாதிப்பை அடுத்து புஞ்சாக் ஆலாமில் மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக நிறுத்தம்
வெள்ளப் பாதிப்பை அடுத்து புஞ்சாக் ஆலாமில் மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக நிறுத்தம்
வெள்ளப் பாதிப்பை அடுத்து புஞ்சாக் ஆலாமில் மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக நிறுத்தம்

ஷா ஆலாம், நவ 6 : வெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து , புஞ்சால் ஆலாமில் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதிச் செய்வதற்காக, மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடீன் ஷாரி தெரிவித்தார்.

அதோடு வெள்ளப் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உடனடியாக சிறு பெரிய அளவிலான வெள்ளத் தடுப்பு திட்டங்களை விரைவுப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

"தற்போதைய கால கட்டத்தில், தினந்தோறும் மழை பெய்யுமென்பதால், அட்டவணைப்படி அத்திட்டங்களை மேற்கொள்வது சூழ்நிலைக்குப் பொருந்தாது " என அவர் குறிப்பிட்டார்.

" வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, தினந்தோறும் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும், பள்ளிக்கு பிள்ளைகளைக் கொண்டு சென்று அழைத்து வருபவர்களுக்கும் ஒரு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது. "

ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது, தான் மற்றும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்த அச்சமில்லா ஒரு வாழ்க்கையைப் பெற மக்களுக்கு உரிமையுண்டு" என்றாரவர்.

இவ்வேளையில், வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிகள் அதிகரிக்கப்படுமென அமிரூடின் கூறினார்.

அதுமட்டுமின்றி, வெள்ளம் வடிந்தப் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளை சுத்தம் செய்வதோடு, சீரமைத்து தரும் பணிகளை, மாநில அரசாங்க அமைப்புகளும், MBI அறவாரியமும் இணைந்து விரைவுப்படுத்துமென, அவர் குறிப்பிட்டார்.

பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரையில், தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளவர்களுக்கு, NADMA - தேசியப் பேரிடர் நிர்வாக மையத்தின் மூலம் 1,500 ரிங்கிட் வரை உதவி வழங்கப்படும் என்றாரவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.